அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

697

இலங்கை ரூபாவின் பெறுமதி..

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக நேற்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் நேற்றைய நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை 188.66 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 183.16 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த மாதத்தின் முதல் பகுதியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்திருந்தது. ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி டொலர் ஒன்றில் விற்பனை விலை 199.75 ரூபாயாக கடந்தது.

பிரித்தானியா பவுண்டு, யூரோ, யுவான் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகிய நாணயத்துடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.