தேன் எடுக்கச் சென்ற மாணவனுக்கு நடந்த விபரீதம்!!

512

தேன் எடுக்கச் சென்ற..

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சியில் மா ணவர் ஒருவர் காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்க சென்று உ யிரிழந்துள்ளார். இந்த துயர ச ம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சாம்பல்தீவை சேர்ந்த 19 வயது மா ணவனே உ யிரிழந்துள்ளார். நேற்று காலை மூன்று பேர் அந்தப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றனர். இதன்போது, மற்றைய இருவரை விட்டு வழிமாறிய இவர், காணாமல் போனார்.

தொடர்ந்து ஏனையவர்களால் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர், 16 அடி உயரமான மரத்தில், மரக்கிளை உடலில் குத்திய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிலாவெளி கைலேஸ்வரன் மகாவித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவன் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எழுத காத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.