வவுனியா மாணவர்களுக்கு இணையம் ஊடாக இலவச கற்றல் நடவடிக்கை!!

1057

கற்றல் நடவடிக்கை..

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளமையினையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சூம் (ZOOM) இன் ஊடாக இலவச கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் வவுனியா தெற்கு, வடக்கு வலயக்கல்வி பணிமணையினர், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் சூம் (ZOOM) ஊடான கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது புலமைப்பரிசில் தரம் 5 மாணவர்கள், கா.பொ.த சாதாரண தர மாணவர்கள் , கா.பொ.த உயர்தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒரே தடவையில் 500 மாணவர்களை இணைக்கும் வசதி குறித்த சூம் இணையத்தளத்தில் உள்ளமையினால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இலகுவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.