இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளை (07) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி 10 ரூபாவாக இருந்த இறக்குமதி வரி 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
இதனால் உருளைக்கிழங்கின் விலை 30-40 ரூபாவால் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.