தன் முதல் நாயகனான விஜய்க்கு மீண்டும் ஜோடியாகிறார் பாலிவுட்டின் டாப் நடிகையான ப்ரியங்கா சோப்ரா. நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தீவிரமாகத் தேடி வந்தனர்.
புதுமுகமாக இல்லாமல் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
தற்போது கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இது தமிழில் அவருக்கு முதல் படம். இந்நிலையில் அவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டனர்.
படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்த படுகோனே அதற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டார். ஆனால் படத்திற்கான பட்ஜெட்டை விட இது அதிகம் என்பதால் முயற்சியைக் கைவிட்டனர். அடுத்து நடிகை பிரியங்கா சோப்ராவை படத்தில் நடிப்பதற்கு கேட்டனர்.
படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் தமிழில் நடிக்க ஆர்வமானார் பிரியங்கா சோப்ரா. அவரது சம்பள தொகையும் நிம்மதியைத் தருவதாக இருந்தது.
பிரியங்கா சோப்ரா தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தார். விஜய்தான் அவரது முதல் ஹீரோ. அதுமட்டுமல்ல, இருவரும் இணைந்து ஒரு பாடலையும் சொந்தக் குரலில் பாடினர் அந்தப் படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.