இணையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!!

555

Chattingகனடாவில் வசிக்கும் இந்தியர் இணையத்தளத்தில் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கனடாவின் சஷ்கட்செவான் மாகாணத்தின் ரெஜினா பகுதியில் வசிப்பவர் யஷ்ஹன்தீப் திலான். இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறினார்.

இன்டர்நெட்டில் சட் செய்வதை வழக்கமாக கொண்ட அவர், கனடாவில் எட்மான்டர் லோக்கல்ஸ் என்ற இன்டர்நெட் சென்டரில் சட்டிங்கில் இருந்த போது 13 வயது சிறுமி என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.

அது முதல் தொடர்ந்து இருவரும் சட் செய்ய ஆரம்பித்தனர். இதில் நெருக்கம் அதிகரித்தது. செக்ஸ் பற்றி சட்டிங் செய்ய ஆரம்பித்த திலான் வரம்பு மீறி அந்த சிறுமியிடம் சட்டிங்கில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் திலான் அந்த சிறுமியை சந்திக்க விரும்பி அதற்காக ஏற்பாடு செய்தார். 2010ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி சிறுமியை சந்திக்க அவர் ரெஜினா பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.

அங்கு பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திலானுக்கு 3 மாத சிறை தண்டனையும் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்துவது குறித்து 3 ஆண்டு பயிற்சியும் எடுத்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வித்தியாசமான இந்த தீர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இவர் தண்டனை காலத்துக்கு பிறகு திலான் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.