யுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் இங்கிலாந்தில் கைது!!

367

Cameraயுவதி ஒருவரின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

லண்டன் பக்கிங்ஹேம் பகுதியில் வசித்துவரும் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பர்மிங்ஹேமில் கடைத் தொகுதியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியமை தொடர்பில் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கண்காணிக்கப்பட்டதை அடுத்து. இந்த கைது இடம்பெற்றுள்ளது.

63 வயதான சம்பந்தப்பட்ட வைத்தியர் மிகவும் சிறிய ரக கெமராவினால் யுவதியொருவரின் கால்கலை ஒளிப்பதிவு செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



பொது ஒழுக்க விழுமியங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதான வைத்தியர், பர்மிங்ஹேம் நீதவான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது செயற்பாடுகளால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதால், அதனை குற்றமாக தாம் கருதவில்லை என்றும் வைத்தியர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் யுவதியின் அந்தரங்கத்தை அனுமதியின்றி ஒளிப்பதிவு செய்தமை குற்றம் என நீதவான் அறிவித்துள்ளார். குற்றவாளியாகக் காணப்பட்ட வைத்தியருக்கு மூன்று மாத பணி நிறுத்தத்துடன், 240 ஸ்ரேலிங் பவுண்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதவிர மறு அறிவித்தல் வரை பெண் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் குற்றவாளியான வைத்தியருக்கு பர்மிங்ஹேம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.