வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 424 ஓட்டங்களை குவித்தாலும், உலக சாதனையை தவறவிட்டுள்ளார் இலங்கை வீரர் குமார் சங்கக்கார.
வங்கதேசத்தில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த அணியுடனான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று சதமடித்த குமார் சங்கக்கார, மொத்தம் 319 ஓட்டங்களை குவித்தார்.
2வது இன்னிங்ஸில் 105 ஓட்டங்களை எடுத்திருந்தார். மொத்தம் இந்த ஒரே டெஸ்ட் போட்டியில் 424 ஓட்டங்களை எடுத்தார்.
இதற்கு முன்னர் கிரஹாம் கூச்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
இங்கிலாந்து அணியின் கிரஹாம் கூச் 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 333 ஓட்டங்களையும், 2வது இன்னிங்ஸில் 123 ஓட்டங்களையும் (மொத்தம் 456) குவித்தார், அவர்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்.
இவருக்கு அடுத்தபடியாக ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மூன்று சதமும், மற்றொரு இன்னிங்ஸில் மற்றொரு சதமும் அடித்த 2வது வீரர் என்ற பெருமைக்குரியவானார் சங்கக்கார.
இருப்பினும் இன்னும் 33 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், கூச்சின் சாதனையை மிஞ்சியிருக்கலாம்.