பிரான்சை தாக்கிய புயலால் வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்!!

452

Franceபிரான்சில் மிக கடுமையான புயல் காற்று வீசியதால், பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கடுமையான புயல் காற்று வீசி வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், 55,000 வீடுகள் இருளில் மூழ்கின. குறிப்பாக Morlaix என்ற நகரம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இக்கடும் புயலின் தாக்கத்தால் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் பாரிஸ், Basse Normandie, Haute Normandie, Ile France போன்ற முக்கிய பகுதிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாரிஸில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல் தாக்கம் பதிவானபோதும், விமான போக்குவரத்து எவ்வித தடையும் இன்றி செயல்பட்டது.



இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், வரலாறு காணாத புயல் என கூறமுடியாது என்றாலும் இதன் தாக்கம் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.