வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 201 கடற்படை வீரர்கள் விடுவிப்பு!!

468

கடற்படை வீரர்கள்..

வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகாடு இராணுவ முகாம்களில் வெலிசறை இராணுவ முகாமை சேர்ந்த 276 கடற்படை வீரர்கள் கடந்த 22 மே மாதம் இரவுதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் 20 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட 201 கடற்படை வீரர்கள் இன்று(11.06.2020) காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை உத்தியோகத்தர்கள் பலருக்கு கோரோனா நோய்தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 20 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட கடற்படை வீரர்கள் இன்று காலை பம்பைமடு இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 131 பேரும்,

பெரியகாடு இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 70 பேருமாக மொத்தம் 201 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வெளியேறியுள்ளனர்.

குறித்த இரண்டு இராணுவ முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்களில் இம் மாதம் 6 ஆம் திகதி நான்கு கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று பி.சி.ஆர் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் நால்வரும் ஐ.டி.எச் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது பம்பைமடு இராணுவ முகமில் 40 பேரும் பெரியகாடு இராணுவ முகாமில் 31 கடற்படை வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.