விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் 13 பேர் தமிழகத்தில் விடுதலை!!

435

High Court2009 ம் ஆண்டில் தமிழகம் சென்னையில் வைத்து கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்ற சந்தேகிக்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் 12 பேர் உட்பட்ட 25 பேர் செய்மதி தொலைபேசிகள் உட்பட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 பேர் நேற்று சென்னை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் காவல்துறையினர் சமர்ப்பித்த ஆவணங்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அத்துடன் சந்தேகநபர்கள் தொடர்பில் சந்தேகம் கொள்வதற்கு காரணங்கள் இல்லை என்ற காரணத்தினால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.