சுகாதார பாதுகாப்புடன் மீண்டும் ஆரம்பிக்கப்படும் அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை!!

744

அடையாள அட்டை..

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த, ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார பாதுகாப்புடன் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் அலுவலகத்தில் தினமும் 250 பேருக்கும், காலியில் உள்ள அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கும் அடையாள அட்டைகளை விநியோகிக்கப்பட உள்ளன.

ஒரே நாளில் அடையாள அட்டைகளை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பங்களை கிராம சேவகரிடம் உறுதிப்படுத்தி, அதனை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் கிளை அலுவலகத்தில் கையளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.