தமிழில் நேரம், நையாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நஸ்ரியா நசீம். இவருக்கும் பிரபல இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசிலுக்கும் நேற்று கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடக்க உள்ளது. 24ம் திகதி ஆலப்புழையில் வரவேற்பு நடக்க உள்ளது.
பஹத் பாசில் மலையாளத் திரையுலகில் முன்னணி ஹீரோவாக உள்ளார். நஸ்ரியா, தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.