ரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11ம் திகதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி போன்ற மொழிகளில் ரிலீஸ் செய்கின்றனர். 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இதனால் வேறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கமலின் விஸ்வரூபம்–2, விக்ரமின் ‘ஐ’, விஷாலின் நான் சிகப்பு மனிதன், தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே போன்ற படங்களை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டனர். கோச்சடையான் வருவதால் இப்படங்களின் ரிலீசை தள்ளி வைக்க யோசனை நடக்கிறது.