வவுனியாவில் கா ணாமல் ஆக்கப்பட்ட தன் மகனைத் தேடிவந்த தந்தை மரணம்!!

983

வவுனியாவில்..

கா ணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தே டிவந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) உ யிரிழந்துள்ளார்.

கா ணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களை கடந்து தொடர் போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கா ணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்கினேஸ்வரன் என்பவரை தேடி குறித்த போ ராட்டங்களில் கலந்து கொண்ட செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது69) என்ற தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை இடம்பெறவுள்ளது. இதேவேளை தனது மகனைத் தே டி வவுனியாவில் இடம்பெற்றுவரும் குறித்த போ ராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மற்றொரு தந்தையும் அண்மையில் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.