வவுனியாவில் பேருந்து, புகையிரதங்களில் அதிரடி சோதனை : முகக்கவசம் இல்லாவிட்டால் இறக்கி விடப்படுவர்!!

1359

அதிரடி சோதனை..

வவுனியாவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பேரூந்து சாரதி நடத்துனர்கள் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இணைந்து திடீர் சேதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது பேருந்துகள், புகையிரதங்கள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தன.

இச்சோதனையின் போது முகக்கவசம் அணியாமல் சென்ற பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதுடன், பேருந்தின் போக்குவரத்து அனுமதிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது.