ரயில் தண்டவாளத்தில் உறங்கிய இளைஞன் : தலைக்குமேல் வேகமாக சென்ற ரயில் : காவல் தேவதை காப்பாற்றியதா?

1454

ரயில் தண்டவாளத்தில்..

ஜேர்மனியில் ரயில் தண்டவாளத்தின் நடுவில் படுத்து பதின்மவயது இளைஞன் ஒருவன் தூங்கிய நிலையில், அவனைக் கடந்து ரயில் ஒன்று வேகமாக சென்ற நிலையிலும் அவனுக்கு ஒரு சே தமும் ஏற்படவில்லை.

ஜேர்மனியின் Kirn நகரில் அந்த இளைஞன் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றுக்கு சென்றிருக்கிறான். பார்ட்டியில் அதிகமாக ம து அ ருந்திய நிலையில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளான் அவன். நடந்தே சென்ற நிலையில் தூக்கம் கண்ணை சுழற்ற படுத்து துங்கிவிட்டான்.

ஆனால், அவன் படுத்துத் தூங்கியது ரயில் தண்டவாளத்திற்கு நடுவில்… சிறிது நேரத்தில் அவ்வழியே ரயில் ஒன்று செல்ல, தான் ஒரு நபர் மீதாக ரயிலை செலுத்தி வந்ததை உணர்ந்த ரயிலின் சாரதி, பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அந்த நபர் உ யிருடன் இருக்கிறாரா இல்லையா என்று கூட தனக்குத் தெரியாது என்று அவர் கூற, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பார்த்தால், அந்த இளைஞன் அப்போதும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்திருக்கிறான்.

ஏதேனும் காவல் தேவதைதான் அவனைக் காப்பாற்றியிருக்கவேண்டும் என்கிறார்கள் பொலிசார், காரணம், அவனது உடலில் ஒரு சிறு கீறல் கூட இல்லை.

அவனை எழுப்பி, அவனது பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிசார், இதை அவனது இரண்டாவது பிறந்த நாளாக கருதிக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர்.