இலங்கையில் PCR பரிசோதனைக்கு எத்தனை கோடி செலவு?

719

PCR பரிசோதனை..

இலங்கையில் PCR பரிசோதனைக்காக மாத்திரம் அரசாங்கம் இதுவரையில் 65 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த பரிசோதனைகள் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளிகளை அடையாளம் காண பயன்படுத்தும் மிகவும் வெற்றிகரமான முறை இதுவாகும். இலங்கையில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்காக நபர் ஒருவருககு 6500 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

கிழக்கு கொழும்பு வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரிவில் நாள் ஒன்றுக்குள் 500 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடு முழுவதும் தேவையான இடங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.