அமெரிக்காவில் பூனைக் கடியால் பாதிக்கப்பட்டவரின் கை, கால் விரல்கள் கல் போன்று உருமாறியுள்ளன.
அமெரிக்காவின், ஓரேகான் மாகாணத்தை சேர்ந்தவர், பால் ஸ்டீவ் கேலார்ட் (61). கடந்த மாதம், இவரை பூனை கடித்தது. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பால் ஸ்டீவ்வின் கை, கால் விரல்களில், முடிச்சுக்கள் ஏற்பட்டு வீக்கம் உண்டானது.
கை, கால் விரல்களின் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. கடந்த, 27 நாட்களாக, கோமா நிலையில் இருந்த, பால் ஸ்டீவ்வுக்கு, உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதமான நிலையில், அவரது இதயம், செயலிழந்துவிட்டது. நிமோனியா, நெரிகட்டுதல் உள்ளிட்ட, மூன்று நோய்கள் ஒரே நேரத்தில் தாக்கியிருப்பதால், அவர், உயிர் பிழைப்பது கடினம் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.