விநோத ஒவ்வாமை பிரச்சினையால் குளிக்க முடியாமல் தவிக்கும் அழகிய இளம்பெண்!!

1134

இளம்பெண்..

அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் விநோத ஒவ்வாமை நோய் ஒன்றால் அவதியுற்று வருகிறார். Rachael Fetter (23) என்ற அந்த இளம்பெண்ணுக்கு Aquagenic Urticaria என்னும் பிரச்சினை. அதாவது தண்ணீர் அலர்ஜி.

உடலில் தண்ணீர் பட்டால் உடல் சிவந்து கடுமையான வலியை ஏற்படுத்தும் என்பதால், குளிக்கவோ கை கழுவவோ படாத பாடு படும் Rachael, மழையில் நனைந்தால் அவ்வளவுதான்.

அத்துடன் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே குளிக்கும் Rachaelஆல் ஒரு நேரத்திற்கு அரை கப் தண்ணீர் மட்டுமே குடிக்கமுடியும்.

ஆகவே, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குளூக்கோஸ் ஏற்றுவதுபோல், அவ்வப்போது திரவங்களை உடலுக்குள் ஏற்றிக்கொள்கிறார் Rachael.

வியர்த்தாலும் உடல் சிவந்து வலியை ஏற்படுத்தும் இந்த பிரச்சினை மொத்த பூமியிலும் 50 பேருக்குத்தான் உள்ளதாம்.

வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இதே பிரச்சினை கொண்ட யூடியூப் பிரபலமான நியா செல்வே என்ற பெண் தனது நிலை குறித்து விளக்குவதைக் காணலாம்.