பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடத்தில் இன்று காலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பம்பலப்பிட்டி, இலக்கம் 64 டேவிட்சன் வீதியில் உள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்திலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.