மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கைக்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் மாத்திரமன்றி வேறு வெளிநாடுகளுக்கு இலங்கை பணிப்பெண்களை அனுப்புதல் மட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயத்தை குவைத்திற்கு இலங்கை தூதுவர் சி.ஏ.எச்.எம்.விஜேரட்ன தெரிவித்தார். குவைத்தில் மொத்தமாக 130,000 இலங்கையர்கள் பணியாளர்களாக உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேர் வீட்டுப்பணியாளர்களாக செயற்படுகின்றனர்.
பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் சமூக குடும்ப பிரச்சினைகள் பெருமளவில் அதிகரித்துவதாக குவைத்திற்கான இலங்கை தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.