முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந்த் சாதனா என்ற தாயும், 03 வயதான ஆனந்த் யதுசிகா என்ற அவரது மகளும் மரணமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த விபத்தில் படுகாயமடைந்த ரதி என்ற பெண் புதுக்குடியிருப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்பி விட்டு புறப்பட்ட போது, எதிரே வந்த கன்டர் ரக வாகனம் மோதி விபத்து சம்பவித்ததாகவும் இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இதனைத் தொடர்ந்து கன்டர் ரக வாகனச் சாரதியை கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர். இவர்களின் சடலங்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.