அனுமதிப் பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று மன்னார் பெரியகரசல் பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.