காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களுக்கு பாதுகாப்பளியுங்கள் : பொலிஸ் நிலையத்தில் மனு!!

414

lovers

நாளை மறுநாள் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் பொலிஸ் நிலையத்தில் இன்று ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது,

பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் நாளை மறுநாள் நடைபெறும்.

நாளை மறுநாள் பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் காதலர்களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். காதல் ஜோடிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.



காதலர் தினமான பெப்ரவரி 14ம் திகதி திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு, பொலிஸ் நிலையத்துக்கு வந்தால், அவர்களுடைய புகார் மனுக்களை ஏற்று பாதுகாப்பு வழங்க வேண்டும். எல்லை பிரச்சினையை காரணம் காட்டி திருப்பி அனுப்பக்கூடாது.

காதலர் திருமணங்களை ஆதரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் பிரச்சினையால் கௌரவ கொலை நடைபெறாமல் தடுக்க வேண்டும். காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும். காதலர்களின் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.