அரண்மனை படத்தில் தெய்வக்குழந்தையாக நடித்துள்ளாராம் ஹன்சிகா. கடந்த அக்டோபர் முதல் திகதி அரண்மனை படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் ஆரம்பித்த சுந்தர்.சி, இந்தப்படத்தை இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இதில் தன்னுடைய கரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளாராம் ஹன்சிகா. காரணம் படத்தில் அவரது கரக்டர் ஒரு தெய்வக்குழந்தை மாதிரி.
அதாவது எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்கூட்டியே உணர்வது மாதிரியான அபூர்வ சக்திகள் கொண்ட பெண். அதிலும் இந்தப்படத்தில் தாவணி கட்டிக்கொண்டு, நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைத்துக்கொண்டு பார்க்கவே வித்தியாசமான ஹன்சிகாவாக ரசிகர்களுக்கு தெரிவாராம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.