வத்தேகம – மீகம்மனவத்தை – பொல்கோல்ல பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் (12) தனது வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றிலேயே குறித்த சிறுவன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இரண்டு வயதான முஹமட் சஹாப்தீன் சப்ருல்லா மொஹமட் ராய்ப் எனும் சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைகளில் இது, நீரில் மூழ்கியமையினால் ஏற்பட்ட மரணம் எனத் தெரியவந்துள்ளது.