பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவில் குழந்தை ஒன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது.
தனது தாயிடம் நேற்று நள்ளிரவு பால் குடித்துவிட்டு குழந்தை விளையாடியதாக தெரியவருகிறது. அதன்பின் நான்கு மணியளவில் தாய் பார்த்தபோது குழந்தை உயிரிழந்து இருந்ததாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் மரணம் குறித்து தாய் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.