இந்திய பாராளுமன்றில் மிளகுப்பொடி திரவம் அடித்து குழப்பம் : சபை ஒத்திவைப்பு!!

431

Indian Lok Sabhaதமிழக மீனவர்கள் பிரச்சினை மற்றும் தெலுங்கானா பிரச்சினை காரணமாக இந்திய பாராளுமன்றின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடி திரவம் அடித்து காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் தாக்குதல் நடத்தினார். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திரவத் தாக்குதலில் இருந்து தப்பித்து சென்ற உறுப்பினர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ராஜகோபால் அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவராவார்.

மிளகுப்பொடி வீரியம் அதிகமானதால் மக்களவையில் இருந்த பத்திரிகையாளர்கள் இருமிக்கொண்டே இருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.