தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் வட சென்னை மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் முகமது சுல்தான், முகமது அலி, கலீல், நிஜாம் உள்பட 15 பேர் இன்று பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில் காதலர் தினத்தன்று பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காதலர் தினம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்றையும் புகார் மனுவுடன் இணைத்து இருந்தனர்.
அதில் கிறிஸ்தவ போதகர் வலன்டைன் என்பவர் நினைவாக ரோம் பாரம்பரியத்தின் வழியாக வந்ததுதான் இந்த காதலர் தினம். இதனை மேற்கத்திய நாடுகள் வணிக நோக்கத்திலேயே காதலர் தினமாக அறிவித்து உள்ளன.
இதனால் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் காதலால் தற்கொலை செய்து கொள்வதை நினைத்தும் வீட்டை விட்டு ஓடிப்போகும் போதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.