கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு!!

680

மீனவர்..

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறி விழுந்த மீனவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் நேற்று கரையொதுங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற 72 வயதுடைய மீனவரே இவ்வாறு கடலில் தவறி விழுந்துள்ளார்.

கடலில் விழுந்த மீனவரை சக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தொடர்ந்தும் தே டிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நேற்று காங்கேசன்துறை கடற்கரையில் குறித்த வயோதிபரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.