மறைந்த பாலுமகேந்திரா அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைப்பட துறையை சேர்ந்த பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து, கமல்ஹாசன், சாருஹாசன், மோகன் சர்மா, விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகுமார், கே.வி.ஆனந்த், பி.வாசு, பார்த்திபன், நாசர், ஒய்.ஜி.மஹேந்திரா, அர்ச்சனா, ரேகா, குஷ்பூ ஆகியோரும்;
மற்ற துறைகளை சேர்ந்த காவல்துறை அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதி ஐ.பி.எஸ், வசந்த குமார்(காங்), ஜி.ராமகிருஷ்ணன்(மா.கம்யூ), ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் ரோசய்யா, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாலு மகேந்திரா உடல் சாலி கிராமம் தசராபுரத்தில் உள்ள வீட்டில பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர்–நடிகைகள், இயக்குனர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் பகல் 1 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.