காதலிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல, மாறாக காதல் செய்வதற்கு சிம்மாசனம் எனும் இதயம் கிடைத்தாலே அதில் நாம் அன்பான வாழ்க்கையை வாழ்ந்து ஜெயித்து விடலாம். இந்த உலகில் காதல் என்பது பொதுவான ஒன்றாகும், காக்கா குருவிகளுக்கு கூட வரும் காதல் ஏன் மாற்றுத்திறனாளிகளுக்குள்ளும் வரக்கூடாது.
சில மாற்றுத்திறனாளிகள் நாம் ஊனமாய் பிறந்துவிட்டோமே என்று தங்களுக்கென்று ஒரு சோதனை எனும் இருட்டான வட்டத்தை வரைந்து கொண்டு தங்கள் காலத்தை கழித்துவிடுவர். ஆனால் அவர்களுக்குள்ளும் சாதனைகள் எனும் வெளிச்சம் உண்டு, அந்த வெளிச்சம் நம்மேல் விழ நாம் தான் வட்டத்தை விட்டு வெளிவரவேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் தான் மோனிகா.
தன்னுடைய இரண்டு வயதிலேயே போலியோ எனும் நோயால் தன் இரண்டு கால்களையும் இழந்தவள் இவள். ஆனால் இவளுக்கென்று சில தனித்தன்மை உண்டு, அழகானவள், நன்றாக சமைப்பவள், அதைவிட எந்த செயலாக இருந்தாலும் கடினமாக உழைப்பவள்.
மேலும் தன் இரண்டு கைகளையே, காலாக மாற்றி இந்த உலகில் வலம் வரும் இவளுக்கு தாரா என்னும் அன்புச் சகோதரன் ஒருவன் இக்கிறார்.
பாதிரியாராய் இருக்கும் இவரின் நண்பன் தான் சாந்த், துணிதைப்பவராக இருக்கும் சாந்த் தன்னுடைய பணியை ஒரு போராட்டமாகவே நடத்தி வந்துள்ளார்.
ஏனெனில் போலியோவால் சாந்தில் ஒரு கால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தான் மோனிகாவை சந்தித்த சாந்த் அவளை தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளான்.
தன் எதிர்காலம் குறித்த கேள்விக்குறித்து விடை கொடுத்தாள் மோனிகா, இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணபந்தத்தில் இணைந்து கொண்டு தங்கள் இல்லற வாழ்க்கையை நல்லறமாய் ஆரம்பித்துள்ளனர்.