கற்பை காப்பாற்ற உயிரை தியாகம் செய்ய துணிந்த மாணவி!!

454

Abuseமேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அங்கு இளைஞர் குழுவினர் குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றனர். இதன்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த அப்பெண் படுகாயமடைந்தார்.

அந்த பயணிகள் ரெயில் மேற்கு மிட்னாபூர் அருகேயுள்ள பன்ஸ்குரா அருகே வந்தபோதே இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு அருகேயுள்ள டம்லுக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாவே உள்ளதாகவும் அதே சமயத்தில் அவர் குணமாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொல்கத்தா அருகே உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்ற அந்த மாணவியை மானபங்கப்படுத்த முயற்சி செய்தவர்கள் அவரை கடத்தவும் முயன்றதாக அவரின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.