வெலிகடை சிறையில் இருந்து தப்பித்த கைதி ஒருவர் 17 வருடங்களின் பின்னர் பொலன்நறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் 1987 ஆம் ஆண்டு கொலை சம்பவம் ஒன்று தொடர்பாக பொலன்நறுவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி முதல் 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு ஜூலை மாம் 22 ஆம் திகதி சிறையில் இருந்து தப்பித்த இந்த நபர் புலஸ்திகம பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இது குறித்து பொலன்நறுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த நபர் கைது செய்யப்பட்டார். 48 வயதான இந்த நபர் பொலன்நறுவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.