பிக்குகளின் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம்!!(படங்கள்)

511

பிக்குகள் ஏற்பாடுகள் செய்த வித்தியாசமான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதுரகத்திற்கு எதிரில் நேற்று நடைபெற்றது.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் இலங்கை எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிக்குகள் மற்றும் சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பிக்குகளும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களும் தேங்காய்களை வீதியில் உடைத்து எதிர்ப்பை வெளியிட்டதுடன் கங்காராம பெரஹெரவில் கலந்து கொண்ட யானைகளையும் அதில் அழைத்து வந்திருந்தனர்.

அமெரிக்காவுக்கு எதிரான இந்த எதிர்ப்பு நடவடிக்கையை கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி ஏற்பாடு செய்திருந்தார்.

1 2 3 4 5