சிறைச்சாலைக்குள் மீட்கப்பட்ட 4800 கைத் தொலைபேசிகளை அழிக்க நடவடிக்கை!!

598

Mobilesசிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கெள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, கைதிகளால் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட 4800 கையடக்க தொலைபேசிகளை அழிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்டுள்ள கைத்தொலை பேசிகளின் ஒரு தொகையை மத்திய சுற்றாடல் அதிகார சபையினரிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைப்பறப்பட்ட கையடக்க தொலைப்பேசிகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி கோரப்பட்ட போதிலும், தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.