கிளிநொச்சி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய 3 சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில்!!

569

Courtகிளிநொச்சியில் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுவர்கள் மூவரை எதிர்வரும் 19ம் திகதிவரை குறித்த இல்லத்திலேயே பொலிஸ் காவலில் தங்கவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.உரும்பிராய், கிளி.உருத்திரபுரம் மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் நேற்று முன்தினம் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் நடத்திய தேடுதலின்போது நேற்றைய தினம் உருத்திரபுரம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் முன்றலில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரால் மூவரும் பிடிக்கப்பட்டனர்.

இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் சிறுவர்களை ஆஜர்ப்படுத்தியபோது, அவர்களை குறித்த சிறுவர் இல்லத்தில் பொலிஸ் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.