உலகக் கிண்ணத்தில் ஆடக்கூடாது : கிளார்க்குக்கு கட்டளையிட்ட அலன் போடர்!!

553

Clerkஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிளார்க் ஆடக்கூடாது என்று முன்னாள் அணித்தலைவர் அலன் போடர் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் கண்டிப்பாக விலகவேண்டும், உலக கிண்ணத்தில் ஆடக்கூடாது.

அவர் டெஸ்டில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அடுத்த 12 மாதங்கள் கிளார்க்குக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

அலன் போடர் தலைமையில் அவுஸ்திரேலியா 1987ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.