வவுனியாவில் பொலிஸாரின் 154வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மரநடுகை!!

835

மரநடுகை..

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154வது ஆண்டு நிறைவினையொட்டி பயன்தரும் மரங்கள் நாட்டி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் தலைமையில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (03.09.2020) காலை 9 மணியளவில் நடைபெற்றிருந்தது.

இந் நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலடி சில்வா கலந்துகொண்டு பாடசாலை வளாகத்தில் பயன் தரும் மரங்களை நாட்டி வைத்ததுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பாடசாலை சமூகத்தினரும் மரங்களை நாட்டி வைத்தனர்.