எரியும் கப்பல்..
அம்பாறை – சங்கமன்கண்டியை அண்மித்துள்ள கடற்பகுதியில் விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பலில் தொடர்ந்து தீ பரவி வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 270,000 மெட்ரிக் டன் மசகு எண்ணெயுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்தக் கப்பலில் திடீரென தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.
எம்.டீ.நியு டயமன்ட் எனப்படும் இந்த கப்பலில் எண்ணெய் கசிய ஆரம்பித்தால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடல் எல்லைக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என கடல் சுற்று சூழல் பா துகாப்பு அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த கப்பலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மசகு எண்ணெயுடன் டீசலும் உள்ளமையினால் தீ பரவல் வேகமடைந்தால் கப்பல் வெ டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலிப் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர், இந்திய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், விமானப்படையின் ஹெலிகப்டர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கப்பலில் ஏற்படவுள்ள தீயுடன் கப்பல் வெ டித்தால் அதன் மூலம் ஏற்பட கூடிய பாதிப்பு மற்றும் விஷ புகை காரணமாக அந்த பிரதேச மீனவ மக்களுக்கு பாரிய ஆ பத்து ஏற்படும். இது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கப்பல் தொடர்பான தரப்பினருடன் அரசாங்க நிறுவனம் தொடர்ந்து கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றது. இந்த கப்பலில் ஏதாவது ஒரு வகையில் எரிபொருள் கசிந்தால் அதனை எடுக்க முயற்சிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் உ யிரிழந்துள்ள நிலையில் 22 பேரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.