கிரிக்கெட்டின் முதல்தர இணையதளமான கிரிக் இன்போ ஆண்டு தோறும் சிறந்த வீரர் விருதுகளை வழங்கி வருகிறது.
7 வது ஆண்டுக்கான விருதில் தலைமுறையின் சிறந்த வீரர், கிரிக்கெட்டின் பங்களிப்பு ஆகிய விருதுகளை புதிதாக வழங்க இருக்கிறது.
தலைமுறைக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
மேலும், பரிந்துரை பட்டியலில் ஷேன் வோன் (அவுஸ்திரேலியா), லாரா, முரளிதரன் (இலங்கை), கலிஸ் (தென் ஆபிரிக்கா) ஆகிய வீரர்களும் இடம்பெற்று உள்ளனர்.
கிரிக்கெட் பங்களிப்பு விருதை ராகுல் டிராவிட் பெறுகிறார்.





