கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய அறுவர் கைது!!

848

kollaiபொதுமக்களை அச்சுறுத்தி அவர்களின் பொருட்கள் மற்றும் வாகனங்களை கொள்ளையிடும் சம்பவங்களுடன் தொடர்புடைய அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொள்ளையிடப்பட்ட மோட்டார் வாகனங்கள், தங்க ஆபரணங்கள், துப்பாக்கி மற்றும் ரவைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா, வேயன்கொட, வெல்லவ மற்றும் மஹவ ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஹோரம்பெல்ல, மினுவன்கொட, வலல்லாவிட, ஆடிஅம்பலம் மற்றும் இப்பாகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.