முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் : இன்னும் சில நாட்களில் விடுதலையாக வாய்ப்பு!!

804

Naliniராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் நளினிக்கு தூக்கு இரத்தாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு இரத்து ஆனது. அத்துடன் இந்திய மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து, வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

வேலூர் சிறையில் உள்ள நளினியும் விடுதலை செய்யப்படுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நளியுடன் சிறையில் உள்ள ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டார்.

மத்திய அரசு இவர்கள் நால்வரையும் விடுதலை செய்வதற்கான ஒப்புதலை வழங்காத பட்சதில் தமிழக அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

எனவே நால்வரும் சில நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தமிழ் உணர்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.