இந்திப்பட இயக்குனருடன் தமன்னா காதல்!!

499

Tamana

தமன்னாவுக்கும் இந்தி பட இயக்குனருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா தற்போது ஹம்சா கல்ஸ் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் சயீப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக், இஷாகுப்தா, பிபாஷா பாசு போன்றோரும் நடிக்கின்றனர்.

சாஜித் கான் இயக்குகின்றார். இதன் படப்பிடிப்பில் தான் தமன்னாவுக்கும் சாஜித் கானுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமன்னாவிடம் சாஜித்கான் அதிக அக்கறை காட்டுகிறாராம். ஓய்வில் மேக்கப் அறையிலும் கேரவனிலும் தனியாக உட்கார்ந்து நீண்ட நேரம் பேசுகிறார்களாம்.

அப்போது உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட யாரும் அவர்களை நெருங்குவது இல்லை. தனக்கு என்ன தேவைப்பட்டாலும் சாஜித் கானிடம் நேரிலேயே பேசி வாங்கிக் கொள்கிறாராம்.

தமன்னாவுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் படத்தின் மற்ற இரு நாயகிகளான இஷாகுப்தாவும், பிபாசாபாசுவும் சாஜித்கான்மேல் கடுப்பில் இருக்கின்றனர். தங்களை விட தமன்னாவுக்கு நிறைய சீன்கள் கொடுத்து நடிக்க வைப்பதாகவும் எரிச்சல் படுகிறார்கள். தமன்னா, சாஜித்கான் நெருக்கம் திருமணத்தில்தான் கொண்டுவிடம் என்று படக்குழுவினர் கிசுகிசுக்கிறார்கள்.