வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் இரத்ததான முகாம்!!

1075

இரத்ததான முகாம்..

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் இரத்ததான முகாம் இன்று(19.09.2020) நடைபெற்றது

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் பகவான் ஸ்ரீ சத்ய சாயியின் பக்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.