நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வீரர் ஷகீர்கானை இஷாந்த் சர்மா மிக கேவலமாக திட்டுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது. இதில் நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் 302 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.
இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி விளையாடிக் கொண்டிருந்த போது, 103 ஓவரில் 5வது பந்தினை இஷாந்த் சர்மா வீச, பிரன்டன் மெக்கலம் அடித்தார்.
களத்தடுப்பு செய்து கொண்டிருந்த ஷகீர்கான் மிக மெதுவாக சென்று பந்தை எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த இஷாந்த் சர்மா ஹிந்தியில் ஜாகீர்கானை மிக கேவலமாக திட்டியதாக கூறப்படுகிறது, இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





