பேஸ்புக் காரணமாக மற்றுமொரு இளம் பெண் தற்கொலை!!

966

Hang Deathபேஸ்புக் காரணமாக மற்றுமொரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேஸ்புக் சமூக வலைத் தளத்தின் ஊடாக ஏற்பட்ட காதலே இந்த தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிட்டிகல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
18 வயதான டினேசா நிலக்சி என்ற இளம் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண் சில நாட்களுக்கு முன்னதாக இளைஞர் ஒருவருடன் பேஸ் புக் மூலம் காதல் உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

குறித்த இளைஞர் சகோதரியுடன், நிலக்சியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் போது நிலக்சியின் தந்தைக்கும், இளைஞருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மன வேதனை அடைந்த நிலக்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை பேஸ்புக்கில் வெளியான புகைப்படம் காரணமாக அண்மையில் குருநாகல் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் மாணவி ஒருவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.