அந்த மாதிரி படத்தில் நான் நடிக்கவே இல்லை : ஐஸ்வர்யா ராய் அதிரடி!!

583

Aishwarya-Rai

பி.வாசுவா? யார் அவர்? அவர் படத்தில் நான் நடிப்பது எனக்கே தெரியாத செய்தி. என்று கூறி அதிர வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

பி.வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர் என இயக்குநர் பி.வாசு சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரஸ் ரிலீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை அனைத்து ஊடகங்களும் பத்திரிகைகளும் பெரிய செய்தியாக வெளியிட்டன. அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு என்பதால் அந்த முக்கியத்துவம் தரப்பட்டது.

இந்த செய்தியைப் படித்த ஐஸ்வர்யா ராய் டென்ஷனாகிவிட்டார். உடனடியாக மீடியாவிடம் மறுப்பும் தெரிவித்துவிட்டார். அதுவும் படு காட்டமாக “இந்த செய்தியை வெளியிட்டுள்ள இயக்குநர் யாரென்றே எனக்குத் தெரியாது.

நானெப்படி இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும்? என்னிடம் 60க்கும் மேற்பட்டோர் கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரா என்று கூட நினைவில்லை. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. அந்த மாதிரி ஒரு படத்தில் நான் நடிக்கவே இல்லை” என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

அவரது பிஆர்ஓவும் பி.வாசுவின் பிரஸ் ரிலீஸுக்கு மறுப்பு தெரிவித்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். பி.வாசுவிடம் இதுகுறித்துக் கேட்டால், ஐஸ்வர்யாவை அணுகியது உண்மை. கதை அவருக்குப் பிடித்திருந்தது” என பழைய பிளேட்டையே திருப்பிப் போட்டுக் காட்டுகிறார். ரஜினி போன்ற சிகரங்களுடன் பணியாற்றிய வாசுவுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்.