
இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகி நம்மை மீன் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பீட்டா அமைப்பு நடிகர்,நடிககைள், பிரபலங்களை வைத்து விலங்குகள், உயிரினங்களை காக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டு வருகிறது.
நாய்ப் பிரியை த்ரிஷாவும் பீட்டா விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகியுள்ளார்.
ரிச்சா கடற்கன்னி போல் உடை அணிந்து கடல் தாயின் மடியில் தவழும் மீன்களை சாப்பிடுவதற்கு எதிராக விளம்பரம் செய்துள்ளார்.
மீன்கள் நம் நண்பர்கள். அது உணவு அல்ல என்ற வாசகம் அடங்கிய அட்டையை கையில் பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் ரிச்சா.
விலங்குகள் என்றால் எப்பொழுதுமே எனக்கு ஒரு மென்மையான போக்கு உண்டு. இந்நிலையில் பீட்டா என்னை அணுகியபோது அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன் என்றார் ரிச்சா
பொலிவுட் நடிகர்கள் ஷாஹித் கபூர், ஜோன் ஆபிரகாம், நடிகை கரீனா கபூர் ஆகியோர் பீட்டா விளம்பரத்தை பார்த்து சைவப் பிரியர்கள் ஆகிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.





